• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழில்சார் வளர்ச்சி, நிதி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

July 19, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் வாழ்ந்துகாட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் கரியம்பாளையம் மகளிர் வாழ்வாதார மையத்தில் காலியாக உள்ள தொழில்சார் வளர்ச்சி அலுவலர், தொழில்சார் நிதி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 30ம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது.

தொழில்சார் சமூக வல்லுநர்களுக்கான தகுதிகள் :

ஏதேனும் ஒருமுதுகலை பட்டத்துடன் கணிணி அறிவு பெற்றிருத்தல் வேண்டும். 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். ஊரகதொழில்கள், தொழில்கள் மேலாண்மை மற்றும் நிதி சேவைகள் குறித்த நடவடிக்கைகளில் அனுபவம்.

தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்த முன் அனுபவம் பெற்று இருத்தல் வேண்டும். இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும். தொகுப்பூதியம் மாதம் ஒன்றிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். பெண்கள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத்து பணியாளர்களுடன் ஒருங்கிணைத்து பணியாற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மற்றும் சமர்பிக்க வேண்டிய முகவரி, உதவி இயக்குநர், மாவட்டசெயல் அலுவலர், மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, 2வது தளம், பூமாலை வணிக வளாகம், கோணியம்மன் கோவில் எதிரில் பெரிய கடை வீதி, கோவை- 1. தொலைபேசி எண் : 0422 – 2300633, செல்: 93852 – 99734, 9788174847.

இந்த தகவலை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க