• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொழிலதிபர் பாலியல் ரீதியாக சித்தரவதைபடுத்தி கொலை மிரட்டல் விடுவதாக கோவையில் பெண் புகார்

July 30, 2021 தண்டோரா குழு

பல்லடத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாயை மோசடி செய்து வாங்கியதோடு,தன்னை பாலியல் ரீதியாக சித்தரவதைபடுத்தி கொலை மிரட்டல் விடுவதாக கோவையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி.இவர் முதல்வரின் தனிப்பரிவு,மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.இந்நிலையில் தாம் ஏமாற்றபட்டுள்ளதால் நீதி கிடைக்க மனு வழங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தன்னிடம் பல்லடம் சுக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகனான ஜெயகாந்தன் விசைத்தறி
தொழிலில் முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என கூறி இரண்டு தவணைகளாக ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பெற்றதாகவும்,தொடர்ந்து தமது வீட்டிற்கு வந்த ஜெயகாந்தன் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து தன்னிடம் பாலியல் அத்து மீறல்களில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ மற்றும் படங்கள் எடுத்து மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பணத்தை திரும்ப கேட்ட போது தன்னுடைய ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என அவருடைய நண்பர் நடராஜனுடன் சேர்ந்து மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இது போன்று பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் ஜெயகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.

மேலும் படிக்க