March 22, 2021
தண்டோரா குழு
தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் எஸ் பி வேலுமணியை ஆதரித்து தலைகீழாக நடந்தபடி சங்கிலியால் காரை இழுத்து வாக்கு சேகரித்த சாதனையாளர்.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரித்து கோவையில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இந்த தொகுதியில் அமைச்சர் வேலுமணி மாபெரும் வெற்றி பெறவும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறவும் கோவையில் பல்வேறு சாதனைகளை படைத்த யோகா மாஸ்டர் சத்திரபதி என்பவர் கோவை ஆர்ஸ் புரம் பகுதியில் 1000கிலோ எடை கொண்ட காரை சங்கிலியால் தன் வயிற்றில் கட்டி தலைகீழாக நடந்தபடி 234 மீட்டர் காரை இழுத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்த பிரச்சாரம் இப்பகுதியில் உள்ள மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் போது அதிமுகவை சேர்ந்த கோகுல்குமார்,சாதனையாளர் யூஎம்டி ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.