• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுமி

January 13, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த இராசிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் அனிதா தம்பதியரின் நான்கு வயது சிறுமி அபிக்க்ஷா.தனது சிறு வயதில் இருந்து தற்காப்பு கலைகளில் ஒன்றானசிலம்ப கலையில் ஆர்வம் கொண்ட இவர் சிலம்ப பயிற்சியாளர் சந்திரன் என்பவரிடம் தொடர்ந்து கலைகளை கற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனது விடா முயற்சியால் தற்காப்பு கலை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார் சிறுமி அபிக்க்ஷா.இவரது இந்த சாதனையானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.

தொடர்ந்து அபிக்க்ஷா என்ற சிறுமி மாவட்ட மற்றும் மாநில அளவிலான நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வென்று சாதனைப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க