April 14, 2018
தண்டோரா குழு
காஷ்மீரில் ஆசிஃபா, உன்னோவில் தலித் சிறுமி, ஜார்கண்டில் அஃப்சானா ஆகியோரை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்திய பாஜக, சங்பரிவார் கயவர்களையும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பாடும் பாஜக அரசுகளையும், தலைவர்களையும் கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பெரியார் சிலை அருகில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் கோவை மாவட்டத்தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் EMS இப்ராஹீம், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். பீர் முகம்மது, துணைத்தலைவர்கள் AJ ரெஜீனா, MS சபீர் அலி, மாநில நிர்வாககுழு உறுப்பினர் ஷாஜஹான், தெற்கு மண்டலத் தலைவர் முஜிப், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ஷபீர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.