July 6, 2017
தண்டோரா குழு
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய- தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் அத்து மீறி கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். அவர்கள் இந்திய- தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
மேலும் மீனவர்களின் 2 விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இந்திய- தமிழக மீனவர்கள் 8 பேரை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் முயற்சியில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.