January 5, 2021
தண்டோரா குழு
தைப்பூசம் திருவிழாவிற்கு பொது விடுமுறை அளித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து கோவையில் பாஜகவினர் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தைப்பூச நாளன்று அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில், முருகப்பெருமானை அனைவரும் வழிபடும் வகையில் தைப்பூசம் திருவிழாவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொது விடுமுறை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக கோவை காந்திபார்க்கில் உள்ள முருகன் கோவிலில் பாஜக சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அத்துடன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் பாஜகவினர் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ரமேஷ், பொதுச் செயலாளர் தாமு, மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரேம்குமார், துணைத் தலைவர் பாலமுருகன், மண்டலத் தலைவர் ராஜரத்தினம், சேகர் மாவட்டச் செயலாளர் கார்த்திக் மற்றும் ஜெகன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.