• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது – ராம்நாத் கோவிந்த்

March 4, 2019 தண்டோரா குழு

இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது எனவும் தேவைபடும் போது சுழ்நிலைக்கு ஏற்ப இந்திய விமான படை உபயோகப்படுத்தபடும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விமான படை வீர்ர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

இந்திய இராணுவம், விமான படை, கடற்படை ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பணிபுரியும் அணிகளுக்கு குடியரசு தலைவரால் வழங்கப்படும் உயரிய விருதான நிஷாந்த் எனப்படும் பிரசிடன்ட்ஸ் கலர்ஸ் அவார்டு வழங்கப்படுவது வழக்கம்.இதன் ஒரு பகுதியாக சூலூர் விமான படைத்தளத்தில் உள்ள 5 பேஸ் ரிப்பேர் டிப்போ மற்றும் தெலுங்கானா மாநிலம் ஹக்கிம்பேட் உள்ள ஏர் ஃபோர்ஸ் விமான படைத்தளம் ஆகிய இரு படை அணிகளுக்கு இந்த விருதுகள் இன்று வழங்கப்பட்டது.இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு இரு படையணி வீர்ர்களிடன் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் , தலைமை விமான படை அதிகாரி விரேந்திர சிங் தனுவா, ஈசா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசு தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் mi 17, டோர்னியர், சாரங்க், தேஜஸ், ஏ.என் 32,அவுரவ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் பாராகிளைடிங் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சூலூர் 5 பேஸ் ரிப்பேர் டெப்போ மற்றும் ஏர் போர்ஸ் ஸ்டேசன் ஹக்கிம் பேட் ஆகியவைக்கு விருதுகளை வழங்கிய பின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வீரர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இந்த இரு அணிகளுக்கும் விருதுகள் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.விமான படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது. கடந்த 1975 போரில் ஹக்கிம்பெட் படைப்பிரிவு சிறப்பாக செயல்பட்டது,ஹக்கிம் விமான படை தளத்தில் 1975 முதல் ஹெலிகாப்டரில் பெண் பைலட்டுகளுக்கும் 2016 போர் விமானங்களிலும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா அமைதியை விரும்பினாலும் தேவைப்படும் சமயத்தில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளது. இந்திய விமான படை உறுதியாக இருக்கின்றது. தேவைபடும் போது இந்திய விமான படை உபயோகப்படுத்தபடும். சூழ்நிலை வரும் போது அதற்கு தகுந்த படி இந்திய விமான படை செயல்படும் .

விமான படையில் இரு அணிகளும் சிறப்பான சேவை புரிந்து இருக்கின்றது.சமீபத்தில் எல்லையில் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் நமது விமானபடை வீரமாகவும், சிறப்பாக செயல்பட்டது. பேரிடர் ஏற்பட்ட சமயங்களில் விமானப்படையின் பணி மகத்தானது என பாராட்டு தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இரு அணிகளின் 25 ஆண்டு கால சாதனைகள் குறித்த கையேட்டை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். இதனை தொடர்ந்து விமான படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளையும், விமான சாகச நிகழ்ச்சிகளையும் குடியரசு தலைவர் பார்வையிட்டார்.

மேலும் படிக்க