• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை -கே.பாலகிருஷ்ணன்

March 26, 2019 தண்டோரா குழு

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை எனவும், அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் வரம்பு மீறினால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது இல்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை காந்திபுரம் சி.பி.எம் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே சின்னங்கள் கொண்ட பேட்சுகளை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். , இது வரம்பை மீறிய செயல்.தேர்தல் அதிகாரி முன்பே இது போன்று சின்னங்களின் பேட்ச் அணிந்து சென்று வரம்பை மீறுகின்றவர்கள் எல்லா இடத்திலும் வரம்பை மீறாமல் இருப்பார்களா? 100க் கணக்கான வாகனங்களில், லாரிகளில் மக்களை ஏற்றி வருகின்றனர். முதல்வர் கூட்டத்திற்கு கூட விதிமுறைகளை மீறி ஆட்கள் அழைத்து வரப்படுகின்றனர். காஞ்சிபுரத்தில் கோட்டாச்சியராக இருக்கும் மாலதி , தேர்தல் அதிகாரியாக பணியாற்றிகின்றார். அதே தொகுதியில் அவர் மாமானார், அவர் கணவர் ஆளும்கட்சியில் நிர்வாகிக்களாக இருக்கின்றனர். அந்த தேர்தல் அதிகாரி எப்படி நேர்மையாக செயல்படுவார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நேர்மையாக இல்லை . அதிமுக, பா.ஜ.க வேட்பாளர்கள் வரம்பு மீறினால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது இல்லை. எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தாலும் அதன் மீது நடவடிக்கை இருப்பதில்லை.

நீண்ட காலமாக ஒரே இடத்தில் இருக்கும் காவல் துறைஅதிகாரிகள் , அரசு அதிகாரிகள் ஆகியோர் மாற்றப்பட வேண்டும்.கட்சியின் சார்பில் நாளை விரிவான புகார் தயார் செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பபடும். சூரிய வெப்பம் அதிகமாக இருப்பதால் அதிமுக, பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் என்ன பேசுகின்றோம் என தெரியாமல் பேசுகின்றனர்.மதுரை சி.பி.எம் வேட்பாளர் அவராக விலகி விடுவார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டணத்திற்குரியது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நா தடித்து பேசுகின்றார். ஒரு அமைச்சர் பேசுவதை போல அவர் பேசுவதில்லை. மதுக்கடை குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதுதான் அரசின் கொள்கை என எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க தயாரா? விவசாய கடன்கள் ரத்து செய்ய முடியாது என்று மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் சொல்வது நியாமற்றது.13 பேர் சுட்டு கொலை செய்யப்பட்டதை தமிழிசை நியாயப்படுத்தி பேசுகின்றார்.

விலைவாசி ஏறவே இல்லை என சி.பி.ராதாகிருஷ்ணன் சொல்கின்றார் ஜி.எஸ்.டி க்கு பின்னர் கடுமையான விலைவாசி ஏறி இருக்கின்றது. என்ன சொல்கின்றோம் , பேசுகின்றோம் என தெரியாமல் பா.ஜ.கவினர் பேசுகின்றனர். மதுரை, கோவையில் சிபிஎம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படும் போது நேர்மையாக செயல்படுவார்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் தவறான செயல்பாடுகளால் சிறு குறு ஆலைகள், விசைதறி, பின்னலாடை போன்றவை முடங்கி இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.பணமதிப்பு நடவடிக்கையால் கருப்பு பணம் ஒழியவில்லை. தொழில்கள்தான் ஒழிந்து இருக்கின்றன.வரும் 3 ம் தேதி கோவைக்கு பிரச்சாரத்திற்கு ஸ்டாலின் வருகின்றார்.

அவரை தொடர்ந்து வைகோ உட்பட தலைவர்கள் வருகின்றனர்.இந்திய தேர்தல் ஆணையமே மோடி அரசின் கைபாவையாக செயல்படுகின்றது. தமிழகத்தில் 21 தொகுதியிலும் இடைத்தேர்தலில் தோற்றுவிட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதற்காகவே 18 தொகுதிகளில் தேர்தல் நடத்தி விட்டு 3 தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருக்கின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க