• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேர்தலை விட குழந்தையின் பெற்றோரின் கவலையும், குழந்தையின் மரணமும் தான் முக்கியம் கோவையில் கமல் பேட்டி

March 29, 2019 தண்டோரா குழு

கோவையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஆறுதல் தெரிவித்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடையில் 3 நாட்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதுடன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் சிறுமியின் பெற்றோரை மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

குழந்தையின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்துள்ளேன். அவர்களுக்கு நியாயம் கிடைத்ததாக தெரியவில்லை. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். தேர்தல் என்பதால் தாம் ஆறுதல் கூற வரவில்லை. எப்போதும் வந்திருப்பேன். இது போன்ற சம்பவங்களைத் தடுக்க எல்லோருக்கும் பொறுப்பு உள்ளது. இந்த வழக்கு குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். வீட்டில் இருந்து 20 அடி தள்ளி குழந்தைகளை விளையாட அனுப்ப முடியாவிட்டால், அது பாதுகாப்பான தமிழகம் இல்லை. பதற்றத்தை தணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகச்சிறிய ஊரில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது சரியல்ல.

மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தேர்தல் வேளையில் இருப்பதால், இந்த விவகாரம் குறித்து நேரில் சந்திக்க தங்களுக்கு நேரம் அளிக்கவில்லை. தேர்தலை விட குழந்தையின் பெற்றோரின் கவலையும், குழந்தையின் மரணமும் தான் முக்கியம். குழந்தைகளின் மீதான குற்றங்கள் அதிகம் நடக்கும் இடம் தமிழகம் என ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அப்படி இருக்கக் கூடாது என்றாலும், இந்த சம்பவங்கள் அது உண்மைதானோ என அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் படிக்க