November 26, 2021
தண்டோரா குழு
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிர்க் கட்சிகளுடன் ஏற்பட்ட மோதல் வழக்கில் வானதி சீனிவாசன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2016 ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரம் முடிந்து வானதி சீனிவாசன் கடைவீதி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்ற போது அதிமுகவினருடன் மோதல் ஏற்பட்டது. இது குறித்து கடைவீதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையானது இன்று கோவை கூடுதல் நீதிமன்றம் எண் 5 ல் நடைபெற்ற நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் 6 பேர் நேரில் ஆஜராகினர்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட வானதி சீனிவாசன், கண்மணி பாபு, மோகனா, குணசேகரன், நாகராஜ், சண்முகசுந்தரம் மற்றும் பாபு ஆகியோரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.