March 21, 2021
தண்டோரா குழு
எங்கு சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என கேட்பதால் தேர்தலில் போட்டியின்றி விலகுவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனுத்தாக்கல் செய்ததோடு, வேட்பு மனு ஏற்கப்பட்டு பரப்புரையும் மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், இன்று மாலை, தான் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடாமல் விலகுவதாக ஆடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.அதில் எங்கு சென்றாலும் எவ்வளவு பணம் வாங்கினீர்கள் என கேட்பதால் தேர்தலில் போட்டியின்றி விலகுவதாக கூறியுள்ளார்.அத்துடன் தொண்டாமுத்தூர் தொகுதியில், அமைச்சர் வேலுமணி சிறப்பாக பணியாற்றியிருக்கிறார் என்றும் அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார்.