• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை துரைமுருகன்!

March 7, 2019 தண்டோரா குழு

தேமுதிக ரொம்ப நொந்து போயிருக்காங்க.. அவர்களைப் புண்படுத்த விரும்பலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் அரசியல் கூட்டணி அமைத்து வருகிறது. தே.மு.தி.க., யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதிமுகவுடன் தான் தேமுதிக கூட்டணி அமைக்கும் என கிட்டத்தட்ட உறுதியான நிலையில் தே.மு.தி.க., நிர்வாகிகள் நேற்று துரைமுருகனை சந்தித்தது விமர்சனத்திற்குள்ளானது.

இதையடுத்து, திமுக பொருளாளர் துரைமுருகனை தேமுதிக முக்கிய நிர்வாகிகள் சந்தித்தது குறித்து தேமுதிக துணை தலைவர் சுதீஷ் இன்று விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர்,

அனகை முருகேசனும், இளங்கோவனும் தனிப்பட்ட காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்க சென்றனர். ஒரே மாவட்டத்தை சேர்ந்த நானும், துரைமுருகனும் பலமுறை சந்தித்து அரசியல் தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி உள்ளோம். உள்ளே பேசுவதை வெளியே சொல்லும் பழக்கம் எங்களுக்கு கிடையாது. துரைமுருகன் என்னவெல்லாம் பேசினார் என்பதை நான் கூறட்டுமா? திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் என்னிடம் நிறைய பேசி உள்ளார். பாமக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது எங்களுடைய தொகுதி பங்கீட்டை உறுதி செய்திருக்கலாம் என்பது எங்கள் வருத்தம். அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவாகி விட்டது. இரண்டொரு நாளில் வெளியிடப்படும் என கூறினார்.

சுதீஷ் பேட்டி அளித்த சில நிமிடங்களில் திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேமுதிகவின் மோகன் ராஜ், சுதீஷ் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். நேற்று என்னிடம் சுதீஷ் போனில் பேசினார். பின்னர் தேமுதிக நிர்வாகிகள் இரண்டு பேர் வந்து என்னை சந்தித்தனர். ஆனால் அவர்களை எனக்கு தெரியாது. நீங்கள் வந்தது உங்கள் தலைவருக்கு தெரியுமா என்றேன், தலைவர் சொல்லியே வந்தோம் என கூறினார்கள். தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பற்றிக் கொள்ளவே தற்போது இப்படி கூறி உள்ளார்கள். அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்காக என்னை பற்றி பேசுகிறார்கள். அனகாபத்தூர் முருகேசன் யார் என்றே தெரியாது. சுதீஷ் மீது நான் வைத்திருந்த மரியாதையை அவரே குறைத்துக் கொண்டு விட்டார்.தேமுதிக நிர்வாகிகளை நான் முன்பின் பார்த்தது கூட கிடையாது. மாறி மாறி பேசி வருகிறார்கள் தேமுதிக நிர்வாகிகள்.
தங்களை காப்பாற்றி கொள்ள திமுக மீது வீண்பழி போடுகின்றனர். தேமுதிகவினர் நொந்து போய் உள்ளனர் அவர்களைப் புண்படுத்த விரும்பலை

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க