March 16, 2018
தண்டோரா குழு
தேனி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு சென்னையில் இருந்து 24 பேரும், ஈரோடு,திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 12 பேரும் டிரக்கிங் சென்றனர்.இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும்,தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். இதற்கிடையில் இவர்கள் டிரக்கிங் முடிந்து திரும்பும் போது காட்டு தீயில் சிக்கியுள்ளனர். இதில், 14 பேர் பலியானார்கள் மற்றும் பலர் பலர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில்,மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த சக்திகலா மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர்.
.