• Download mobile app
19 Oct 2025, SundayEdition - 3539
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம்

October 1, 2024 தண்டோரா குழு

தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனை சார்பில், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்த தானம் முகாம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் சுப மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரன் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
மருத்துவர் கலா மகேஸ்வரன், செவிலியர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இரத்ததானம் செய்தனர்.

இந்த முகாமில் காரமடை ஸ்ரீகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் V.சுகுணா, SRMV கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் முனைவர். M ஜெய்குமார், CITU பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பாஷா,யூத் மேட்டுப்பாளையம் நிர்வாகி ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இரத்ததானத்தின் அவசியம் குறித்தும் ஆரோக்கியமான உடல் நலனுக்கு சத்தான உணவின் முக்கியத்துவம் குறித்தும் மருத்துவர் கலா மகேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.சுப மருத்துமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரன் அவர்களது தலைமையில், இன்றைய முகாமில் பங்கேற்றவர்கள் அனைவரும் இரத்த தான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த இரத்ததான முகாமில் ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் மற்றும் YRC மாணவ மாணவிகள் 100 பேர் கலந்துகொண்டு இரத்ததானம் அளித்தனர். இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பத்மாவதி மற்றும் சுரேஷ் மாணவர்களை வழிநடத்தினர்.

இரத்த தானம் வழங்கியவர்களுக்கு, அரசு மருத்துவமனை இரத்த வங்கியின் முதன்மை மருத்துவ அலுவலர் மருத்துவர் தீபிகா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
காரமடை அயர்ன்மேன் ஜிம் மாஸ்டர் நிஷாந்த் மற்றும் குழுவினர்,சமூக ஆர்வலர்கள், யூத் மேட்டுப்பாளையம் குழுவினர், CITU பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.

நிறைவாக சமூக ஆர்வலர் சுகுமாரன் நன்றியுரை ஆற்றினார்.

மேலும் படிக்க