• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய கொடியை கம்பீரமாக பறக்க விட எல்ஜி நிறுவனத்தின் புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

January 19, 2024 தண்டோரா குழு

நம் இந்தியா 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடக உள்ளது.இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.அதே போல குடியரசு தினம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 26 ஜனவரி 1950 அன்று நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிக்கும் மற்றும் கொண்டாடும் நாளாகும்.

இந்த நாட்களில் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தினம், குடியரசு தினம் கொண்டாடப்படும்.
இது மட்டுமல்லாமல் மத்திய ரயில் நிலையம் விமான நிலையம், மாநில ஆட்சியர் அலுவலகம், காவல் ஆணையர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேசியக் கொடிகள் தினந்தோறும் ஏற்றபடும்.

இதனிடையே உயர பறக்க விடப்படும் இந்த தேசிய கொடிகள் ஒரு சில நேரங்களில் காற்று இல்லாமல் கம்பீரமாக காணப்படாமல் சுருண்டு கிடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு 75 வயது குடியரசு தின விழாவையொட்டி கோவையை சேர்ந்த காற்று நிறுவனமான எல்ஜி(ELGI) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து எல்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயராம் வரதராஜ் கூறுகையில்,

சுமார் 12லட்சம் மதிப்பில் 110 அடி கம்பத்தில் தேசியக்கொடி 24 மணி நேரமும் கம்பீரமாக பறப்பதற்கு ஏர் கம்ப்ரசர் பொருத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்,இது வியாபாரத்துக்கு அல்ல ,இது ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே,இந்த திட்டத்தின் செயல்முறைகளை யார் கேட்டாலும் அவர்களுக்கு கொடுக்க தயாராக உள்ளோம். மேலும் இந்த கொடிகளை பறக்கும் முறைகளை தான் இந்திய நாட்டிற்கு சமர்ப்பிக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் படிக்க