• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகலை எரித்து போராட்டம் – எஸ்டிபிஐ கட்சியினர் கைது

December 11, 2019

கோவையில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகலை எரித்து போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து குடிபெயரும் முஸ்லீம்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில், மத்திய அரசு தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது குடியுரிமை திருத்த சட்ட மசோதா நகலினை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய 63 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க