 December 10, 2016
December 10, 2016  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                திரையரங்குகளில் படக்காட்சி தொடங்கும் முன்பு, தேசிய கீதம் இசைக்கப்படும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் சினிமா திரையரங்குகளில் ஒவ்வொரு படக்காட்சி தொடங்குவதற்கு முன்பு, தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என நவம்பர் 3௦-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவினை ஏற்றுக் கொண்டு, திரையரங்க உரிமையாளர்கள் உடனே அமல்படுத்தத் தொடங்கினர். அதன்படி தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அப்போது பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையில் தேசியக் கொடியைக் காட்ட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்ததரவிட்டிருந்தது. 
மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்பதில் சிரமம் ஏற்பட்டது. இது உச்சந நீதிமன்றம் கவனத்திற்கு வந்த காரணத்தினால் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒளிபரப்பவுதற்கு பிறப்பித்த உத்தரவில் சில மாற்றங்களை வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
அந்த அறிவிப்பின்படி  தேசிய கீதம் பாடும் போது மாற்றுத் திறனாளிகள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்றும், கதவுகளை வெளிப்புறம் பூட்டத் தேவையில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.