August 9, 2021
தண்டோரா குழு
தேசிய கல்வி கொள்கை -2020 குறித்த தேசிய அளவிலான மெய்நிகர் கணொலி கருத்தரங்கை ஐஜிஇ என் எஜூ சொல்யுசன்ஸ் நிறுவனம், ஏடபிள்யுஎஸ், இன்டெல், அசோம் மற்றும் ஏஐசிடிஇ உடன் இணைந்து இந்த தேசிய கல்வி கொள்கை நிகழ்வை நடத்துகிறது. இதில் எஸ்என்எஸ் கல்வி நிறுவன தலைவர் டாக்டர். எஸ்.என் சுப்ரமணியன் குழு உறுப்பினராக பங்கேற்று பேசுகிறார்.
இந்தியாவில் முதல்முறையாக உலகின் மிக உயர்ந்த டிஜிட்டல் கார்பரேட் நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், ஒழுங்கு முறையாளர்கள்,மற்றும் மாநில அரசுகள் ஆகியவை இணைந்து ஒரே தளத்தில், தேசிய கல்வி கொள்கை -2020 யை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கின்றன.இந்த நிகழ்வில், இந்திய உயர் கல்வி நிறுவனங்களை சர்வேதசமயமக்கல், டிஜிட்டல் முறைக்கு தயாராக்குதல், கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் கல்வி தொழில்நுட்பங்களால் கல்வி தரத்தை உறுதிப்படுத்துதல் பற்றி விவாதிக்கப்படவுள்ளன.
முதலாவது தேசிய கல்விக் கொள்கை மெய்நிகர் நிகழ்வு, வடஇந்தியாவில் வெற்றிகரமாக முடிந்தது.இதன் தொடர்ச்சியாக தென் இந்தியாவில் வரும் 11.08.2021 அன்று யங் இன்டியன்ஸ் ஸ்டார்ட் அப் ஆன, ஐஜென் எஜூ சொல்யுசன்ஸ், தென்னிந்திய உயர் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களை தயார்படுத்தியுள்ளது. சர்வேதச பெயர் பெற்ற ஐடி தொழில் நிறுவனங்கள், ஏடபிள்யுஎஸ் மற்றும் இன்டெல் உடன் இணந்து, உயர் கல்வி நிறுவனங்கள் தங்களது கொள்ளவை உயர்த்த தயாராகி வருகின்றன.
கல்வி அமைச்சகத்தின் ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் தத்தரேய சகஸ்ரபுதே விருந்தினராக பங்கேற்கிறார்.தெலுங்கானா மாநில உயர்கல்வி அமைப்பின் ஆணையாளர் நவீன் மிட்டல் ஐ.ஏ.எஸ்.,துவக்க உரையாற்ருகிறார். மத்திய கல்வித்துறை முன்னாள் ஏஐடியுசி இயக்குனர் மன்ப்ரீத் சிங் ஆகியோர் இந்த நிகழ்வுக்கு தலைமை வகிக்கின்றனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில், உயர் அதிகாரிகள், வேந்தர்கள், துணை வேந்தர்கள், இயக்குனர்கள், கல்வியாளர்கள், 3000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தொழில்நுட்ப தொழிற்சாலையை சார்ந்தவர்கள், ஒழுங்குமுறையாளர்கள் பங்கேற்று, கல்வியில் தொழில்நுட்பங்களை புகுத்துவது குறித்து விவாதிக்கின்றனர்.
இந்த விவாதத்தின் முக்கிய நோக்கம், இந்திய கல்வி நிறுவனங்ளின் தலைவர்கள், இந்திய தொழில் நிறுவனங்களின் பங்குதாரர்களுடன் இணைந்து, கல்வியில் தொழில்நுட்பத்தை ஏற்படுத்த ஒரு தொழில் நிறுவன சங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.இந்த முயற்சியை மேற்கொண்ட ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஆர். பிரகாசை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.என். சுப்ரமணியன், தாளாளர் டாக்டர் எஸ்.ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் நளின் விமல் குமார், எஸ்.என்.எஸ் நிறுவனங்கள் மற்றும் அதன் முதல்வர்கள் வாழ்த்தினர்.