• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய உடல் உறுப்பு தான தினம்: பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொடையாளர்களுக்கு பாராட்டு விழா

November 27, 2021 தண்டோரா குழு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று தேசிய உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினம் கடந்த 10 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தேசிய உறுப்பு தான தினத்தின் முக்கிய நோக்கமாக மக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதாகும். இதன் அடிப்படையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இந்த ஆண்டும் தேசிய உடல் உறுப்பு தான தினம் கடைபிடிக்கப்பட்டது.

தேசிய உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு, பொது மக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உருவாக்க பி.எஸ்.ஜி மருத்துவமனை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக,
கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் இயக்குனர்எஸ். செந்தில் வளவன் கலந்து கொண்டு நன்கொடையாளர் குடும்பத்தை கவுரவித்து சிறப்பித்தார்.

நிகழ்ச்சியில் கோயம்புத்தூர்ரேபிட் ஆக்சன் போர்ஸ் கமாண்டன்ட் வி.ஜெய மாதவன், ரேபிட் ஆக்சன் போர்ஸ் துணை கமாண்டன்ட்
டாக்டர் அனுதாமா பிரதீப், பி.எஸ்.ஜி மருத்துவமனை மெடிக்கல் டூரிஸம் மேலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற உறுப்பு தானம் சமூக தேவையா? அல்லது சேவையா? அல்லது பொறுப்பா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.

“உறுப்பு தானம் எனது சமூகப் பொறுப்பு” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், நன்கொடையாளர்கள், மருத்துவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

மேலும் படிக்க