January 8, 2026
தண்டோரா குழு
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு,ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் சார்பில் விளையாட்டு விழா நேற்று துவங்கியது. விளையாட்டு விழாவின் நிறைவு விழா 2026 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி மாலை, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், மாருதி உடற்கல்வி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய மாருதி உடற்கல்விக் கல்லூரி முதல்வர் முனைவர் தி. ஜெயபால் வரவேற்றார்.ஸ்ரீராமகிருஷ்ண வித்யாலய கல்வியியல் கல்லூரியின் விளையாட்டு இயக்குநர் முனைவர் சிவசங்கர் விளையாட்டு விழா அறிக்கையை வாசித்தார்.
இந்நிகழ்விற்கு,ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் ஸ்பெக்ட்ரம் தலைவர் Rtn. ஷபிக் அஹ்மது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
நிகழ்ச்சியின் போது பல்வேறு விளையாட்டுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினர் மற்றும் துறவிகள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் விருந்தினர்களுக்கும் அணி மேலாளர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார்.
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சுவாமி விவேகானந்தர் கலை மற்றும் பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் அழகேசன் நன்றி கூறினார்.