• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான கபடி போட்டி; தங்கம் வென்ற வீரர்களுக்கு பி.ஆர்.நடராஜன் எம்பி வாழ்த்து

August 23, 2021 தண்டோரா குழு

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் 4வது தேசிய அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் கோவையை சேர்ந்த அணி தங்கம் வென்று சாதனை படைத்தது. இந்தஅணியில் இடம் பெற்றிருந்த ரத்தினபுரி பகுதியின் வீர்ர்கள் இருவருக்கு கோவை எம்பி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் ஆகஸ்ட் 6 முதல் 8 வரை 4வது தேசிய அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தில் இருந்து பயிற்சியாளர் சதீஷ்குமார் தலைமையில் 17வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 19வயதுக்குட்பட்ட இரு அணிகள் என மொத்தம் 22 பேர் சென்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவுடன் விளையாடி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

இந்த அணியில் கோவை ரத்தினபுரியை சேர்ந்த ரம்யா, ராதிகா என்கிற இரண்டு சகோதிரிகளும் இடம்பெற்றிருந்தனர்.இவர்கள் திங்களன்று மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வந்த வீரர்கள் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் இருவருக்கும் பி.ஆர்.நடராஜன் எம்பி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க