April 7, 2018
தண்டோரா குழு
இந்திய தேசியகொடியை காலில் மிதித்தபடி புகைப்படம் எடுத்து சமூக வளைதலங்களில் பதிவிட்ட இளைஞரை ஆனைமலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மணிகண்டனின் மகன் வெற்றிவேல்(24) இவர் பொள்ளாச்சியில் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் உறுப்பினராக உள்ளார். காவிரி மேலாண்மை அமைக்க கோரியும் நியூட்ரினோ திட்டம் ஸ்டெர்லைட் ஆலை போன்ற தமிழகத்திற்கு ஆபத்தான திட்டத்தை எதிர்த்து இந்திய தேசிய கொடியை காலில் மிதித்து கடந்த ஞாயிறன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், கொடி அவமதிப்பு தொடர்பாக வெற்றிவேல் மீது ஆனைமலை போலீசார் தேசியக் கொடி அவமதிப்பு வழக்குபதிவு செய்துள்ளனர். இவர் கடந்த சில நாட்களாகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்படத்தக்கது.