• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசவிரோத சக்தியாகச் செயல்படும் பீட்டாவை தடை செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்

January 16, 2017 தண்டோரா குழு

“தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாசாரத்திற்கு எதிராகவும் தேசவிரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஓ நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்” என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகத் தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கத் தவறியதால் ஏற்பட்டிருக்கும் பாதகமான விளைவுகளை மத்திய – மாநில அரசுகள் இப்போதாவது எண்ணிப் பார்க்க வேண்டும்.

மத்திய அரசு தனது கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியத்தின் தற்போதைய அமைப்பைக் கலைத்துவிட்டு, புதியமுறையில் அதனை அமைத்து, அதில் தமிழகத்திற்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் உருவாக்க வேண்டும். அப்போதுதான், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகள் ‘விலங்குகளை வதை செய்பவையல்ல’ என்பதும் அவை மனிதருக்கும், விலங்குகளுக்கும் காலங்காலமாக உள்ள வாழ்வியல் அடிப்படையிலான உறவை வெளிப்படுத்துபவை என்பதையும் உணர முடியும்.

தொண்டு நிறுவனம் என்ற பெயரில், நமது கலாச்சாரத்திற்கு எதிராகவும் தேச விரோத சக்தியாகவும் செயல்படும் வெளிநாட்டு நிறுவனமான பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்.

அதைப் போல், இந்தியா எனும் பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும், அவற்றின் தொன்மை அடிப்படைக் கருத்தியலையும் உணராத வெளிநாட்டு அமைப்புகள் வேறு உள்நோக்கங்களுடன் இந்த மண்ணில் செயல்படுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி, கடைசியில் அதனைத் தகர்க்கும் போக்கினை மத்திய – மாநில அரசுகள் இனியும் கடைப்பிடிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் சட்டப் பூர்வமான அனுமதியுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடப்பதற்கு இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படவேண்டும்

இவ்வாறு மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க