• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேங்கா பன் கேள்விப்பட்டிருக்கிறேன் அது என்ன பாஸ் கண்ணாடி பன்.

April 15, 2016 தண்டோரா குழு

உலகளவுல யாரக் கேட்டாலும் தேங்கா பன் சாப்டிருக்கேன், ஜாம் பன் சாப்டிருக்கேன், பட்டர் பன் சாப்டிருக்கேன்னு சொல்லி கேட்டிருப்பீங்க.

ஆனால் இங்கிலாந்துல ஒருத்தர் எனக்குக் கண் கண்ணாடி பன் கிடைச்சிருக்குன்னு சொல்லி எல்லோரையும் அதிர வச்சிருக்காரு பாருங்க.

அந்த பன் தான் இப்போ உலகளவுல பரபரப்பா பேசப்படற பன்னா இருக்கு. இங்கிலாந்துல இருக்கற ஒருத்தர் தன்னோட காலை டிபனை முடிக்க பன் வாங்கிட்டு போய் வீட்ல திறந்து பார்த்திருக்கார்.

பின்னாடி அதை அறுக்கலாம்னு கத்தியை எடுத்துக்கிட்டு வந்து பன்ன திருப்பிப் பார்த்தா அதுல டிசைன் போட்ட மாதிரி ஒரு கண் கண்ணாடி இருந்திருக்கு. அப்பறம் அவர் சுதாகரிச்சிக்கிட்டு என்னன்னு பார்த்தா அந்த பன்ன செஞ்சவரோட கண் கண்ணாடி மாதிரி இருந்திருக்கு.

அப்பறம் அதை அவர் ஒரு படம் எடுத்து சமூக வலைத்தளத்துல பரவ விட்டுருக்காரு. அது என்னடானா இப்போ உலகம் முழுவதும் சுத்தி பல நாடுகள்ல வைரல பரவிக்கிட்டு வரது மட்டும் இல்லாம நம்ம மாதிரி ஆர்வமான செய்திகளை கொடுக்கற பத்திரிக்கைகள்லயும் இடமும் பிடிச்சிருக்கு.

என்ன கடைசி வரைக்கு அந்த பன்ன செஞ்சது யாருன்னு தெரியாதது தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.

ஆனாலும் அந்த படத்த வெளியிட்டவர் கிட்ட ஒரு கேள்வி கேக்கணும் போட்டோ எடுத்த பிறவு அந்த பன்ன என்ன பண்ணாரு அப்படியே அந்த கண்ணாடிய என்ன பண்ணாருன்னு மட்டும் கேக்கணும். யாராவது உதவி செய்வீங்களா பாஸ்…………..

அதோட அந்த கண்ணாடிய மறந்து வச்சவர கண்டுபிடிச்சா எத்தன நாள் அந்த கண்ணாடிய தேடுனாருன்னு கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பாஸ்…………..

மேலும் படிக்க