March 16, 2018
தண்டோரா குழு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியுள்ளது.
மத்தியிலிருந்து கூடுதல் நிதியைப் பெறும் வகையில், ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்குதேசம் கட்சி வலியுறுத்தி வந்தது. பட்ஜெட்டில் அதுதொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்பதோடு, ஆந்திரத்திற்கு நிதி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக தெலுங்குதேசம் புகார் கூறியது.இதனால்,மத்திய அமைச்சரவையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.பிக்கள் ராஜினாமா செய்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேற தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது என்றும் இன்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு பாணி நாடகங்களை ஆந்திராவில் அரங்கேற்ற முடியாது எனவும் சந்திரபாபு நாயுடு பாஜக-வை எச்சரித்துள்ளார்.