• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தெருநாய்கள் கடித்ததில் மேலும் ஒரு சிறுமி பலி

May 14, 2018

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாய்கள் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களில் சிதப்பூர் மாவட்டத்தில் 13 பேர் நாய்கள் கடித்து இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சிதப்பூர் மாவட்டம் மகேச்பூர் சில்வாரா கிராமத்தை சேர்ந்த 12 வயதான ரீனா என்கின்ற சிறுமியை அங்குள்ள 7 தெருநாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த 300 கிராமவாசிகள் அந்த நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து போராட்டம் நடத்தினர்.

ரீனா வின் தந்தையும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்கும் வரை அவரது இறுதிச் சடங்கைச் செய்ய மாட்டேன் என்று கூறினார்.

அதன் பின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் குல்கர்னி சில நாட்களில் நாய்களின் எண்ணிக்கை குறைப்போம் என்று உறுதியளித்தார்.இதனை அடுத்து கிராமவாசிகள் போராட்த்தை கைவிட்டனர்,

இந்த தெரு நாய்களின் தாக்குதலை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை சிதப்பூர் கிராம மக்கள் மத்தியில் குழந்தைகளின் மேல் உள்ள கவலை இருந்து கொண்டுதான் இருக்கும்.

மேலும் படிக்க