• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆலோசனை

June 9, 2018 தண்டோரா குழு

தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ளதால்,அனைத்துத் துறை அரசு அலுவலர்களால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை விழிப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில்,

“தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதால் மாவட்டத்திலுள்ள அனைத்து சாலைகளிலும் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.நெடுஞ்சாலைகள் துறை மூலம் பாலங்கள், சாலைகள் ஆகியவை பழுதடைந்திருந்தால் சரிசெய்திடவேண்டும்,பொதுமக்களுக்கு குடிநீர் முறையாக சுத்திகரிக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும்,ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிக்கைகள் அளித்திட வேண்டும்.மணல் மூட்டைகள் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.மின்சார வாரிய அலுவலர்கள் மின்கம்பிகளிலுள்ள உள்ள பழுதுகள் உடனடியாக சரி செய்திட வேண்டும்.

மழைநீர் சேகரிக்க ஏற்றவகையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகள் ஏற்கனவே தூர்வாரப்பட்டுள்ளது.மீதமுள்ள குளங்களையும் விரைந்து தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வழங்கல் துறை பொதுமக்களுக்கு தேவையான அளவிற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிட தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் சுகாதாராத்தினை பேணிகாத்திட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

கால்நடை பராமரிப்புத்துறையினரும்,கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் கிராமங்கள் தோறும் தொடர்ந்து நடத்திட வேண்டும்.கால்நடைகளை மேடான பகுதிகளில் தங்கவைக்க வேண்டும்.தென்மேற்கு பருவமழை காரணமாக பொதுமக்கள் அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.இந்த அவசர சேவையானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகின்றது.சுழற்சி முறையில் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.அனைத்து துறை அலுவலர்களும்,பணியாளர்களும் தலைமையிடத்தில் இருந்து தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்”.

மேலும் படிக்க