• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்திய சைவ,அசைவ உணவு வகைகளை வீட்டு சுவை மாறாமல் வழங்கும் அம்மணி மெஸ் கோவையில் துவக்கம்

September 15, 2025 தண்டோரா குழு

சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில், .கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுவையுடன்,தென்னிந்திய உணவு வகைகளை தனி ருசியுடன் வழங்கும் விதமாக அம்மணி மெஸ் எனும் புதிய உணவகம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் பகுதியில் உள்ள ஆர்கேடியா ஓட்டல் ரூப் டாப்பில் வரும் 18 ஆம் தேதி முதல் செயல்பட உள்ள அம்மணி மெஸ் துவக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக,காவல் துறை அதிகாரிகள் அருளரசு மற்றும் அன்பு,ஜி.எஸ்.டி.கூடுதல் ஆணையர் ஸ்ரீ பாலாஜி ,கூட்டுறவு பதிவாளர் ராமகிருஷ்ணன்,சுங்க கண்காணிப்பாளர் மன்ஜித்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் அம்மணி மெஸ் உரிமையாளர்கள் மோதிலால் ராஜ் குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் கூறுகையில்,

வரும் 18 ஆம் தேதி முதல் செயல்பட உள்ள அம்மணி மெஸ் உணவத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலைங்களில் உள்ள புகழ் பெற்ற சைவ,அசைவ உணவுகளையும் அங்கு பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் மசாலா மற்றும் பொருட்களை கொண்டு தலை சிறந்த உணவு கலைஞர்களால் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

காலை மதியம், மற்றும் இரவு என மூன்று வேளை செயல்பட உள்ள இந்த மெஸ் நள்ளிரவு 2 மணி வரை சூடான உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என தெரிவித்தனர்.மேலும் வார இறுதி நாட்கள் உட்பட முக்கிய நாட்களில் ரம்மியமான சூழலில் லைவ் பேண்ட் எனும் மெல்லிசையுடன் உணவை வாடிக்கையாளர்கள் ரசித்து ருசிக்கலாம் என கூறினர்.

குறிப்பாக அம்மணி மெஸ் உணவகத்தில், அயிரை மீன் குழம்பு நல்லம்பட்டி சுக்கா, இறால் தொக்கு, குண்டூர் காயின் பரோட்டா, தேங்காய்பால் நெய் சோறு போன்றவை இங்கு கிடைக்கும் என குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க