• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்திய அளவிலான பூனைகள் கண்காட்சி கோவையில் 21ஆம் தேதி துவக்கம்

December 18, 2019

கோயம்புத்தூர் கேட்டரி கிளப் நடத்தும் தென்னிந்திய அளவிலான பூனைகள் கண்காட்சி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல்
கல்லூரியில் வரும் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.

அப்போது கேட்டரி கிளப் நிர்வாகிகள் கூறும்போது,

இந்த கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, டெல்லி, மும்பை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 150 பூனைகள் பங்கேற்கின்றன. 20 வகையான பூனைகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. பெர்சியன், சியமிஸ், மெயின் கவுன், பிரிட்டிஷ் ஷார், பெங்கால் உள்ளிட்ட வகை பூனைகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. உலக கேட்டரி கிளப்பை சேர்ந்த நடுவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று சிறந்த பூனைகளுக்கு பரிசுகளை வழங்குகின்றனர்.

மேலும், பங்கேற்கும் அனைத்து பூனைகளுக்கும் டிராபிகள் வழங்கப்பட உள்ளன. கட்டணம் ரூ.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரையிலான பார்வையாளர்களை எதிர்பார்கிறோம் என்றனர்.

மேலும் படிக்க