March 11, 2021
தண்டோரா குழு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி வடவள்ளி மண்டல் சார்பாக தூய்மை பணியாளர் பெண்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களுக்கு சால்வை அணிவித்து மலர்கொத்து கொடுத்து கேக் வெட்டி பலூன்களை பறக்கவிட்டு பெண்களை போற்றும் வகையில் நடைபெற்றது.
இதில் வடவள்ளி மண்டல தலைவர் வேல்முருகன், ஓபிசி அணி மாவட்ட செயலாளர் சௌமியா,மகளிர் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுஜாதா, ஊடகப்பிரிவு மண்டல தலைவர் காயத்ரி, சுகந்தாமணி, கௌரி, மகளிரணி மண்டல் பொது செயலாளர் காயத்ரி, லோகஅம்பிகா, சுனிதா, ஓபிசி அணி மண்டல் பொருளாளர் சித்ரா, விமலா மற்றும் வடவள்ளி மண்டல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழா மிகவும் சிறப்பாக நடத்தினர்.