• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன் பணியிட மாற்றம்

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார்
துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.60 – க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில்,இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.அதில் ஒருவர் பலியானார்.5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நெல்லை ஆட்சியராக இருந்த சந்தீப்நந்தூரி தூத்துக்குடி ஆட்சியராக நியமனமியக்கப்பட்டுள்ளார். அதைபோல், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், வட சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா, தூத்துக்குடி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நேற்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க