June 6, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி’ஸ்டெர்லைட்’ லைக்கு எதிராக மே 22ல் நடந்த நுாறாவது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது,போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் அவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.இந்நிலையில்,நேற்று நள்ளிரவில் தூத்துக்குடி சென்ற நடிகர் விஜய்,மினி சகாயபுரத்தில் உள்ள ஸ்னோலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய் ஒரு லட்ச ரூபாய் நிதி வழங்கினார்.அதைப்போல், திரேஸ்புரத்தில் உள்ள ஜான்சியின் வீட்டிற்கும்,சாயர்புரம் பேய்க்குளத்தில் உள்ள செல்வகுமாரின் வீட்டிற்கும் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்துப் பேசியதோடு நிதி உதவியும் அளித்தார்.
இந்நிலையில்,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விஜய் இன்று சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.