June 8, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் கண்ணன்,சேகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.இதில்,போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில்,தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்,எஸ்.பி ஆகியோரை மாற்றி தமிழக அரசு உத்திரவிட்டிருந்தது.இந்நிலையில்,தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்ட துணை வட்டாச்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.துணை தாசில்தார் கண்ணனை கயத்தாறுக்கும், சேகரை ஸ்ரீவைகுண்டத்திற்கும் மாற்றி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.