• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

June 1, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து,முத்து அமுதநாதன்,கந்த குமார் என்பவர்கள்,தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு குறித்து டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில்,9 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிபதிகள்,துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று ஏற்கனவே கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார் என்று கேட்டால்,ஓய்வு பெற்ற விசாரணை அமைத்துள்ளதாக பதில் அளிக்கிறீர்கள்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் ஏற்புடையது அல்ல.துப்பாக்கிச் சூட்டின் போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா?தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டது? என வரும் ஜூன் 6 க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க