May 25, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து,கோவை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டித்து, கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களின் போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டு கொன்ற காவல் துறையினரை கண்டித்து, கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடியில் அறவழியில் போராடியவர்களை காவல் துறையினர் திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்திருப்பதாகவும், துப்பாக்கி சூடு நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.