May 25, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து,கோவையில் 70% கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தின் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 70% கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக முக்கிய வணிகவீதிகளாக உள்ள டவுன்ஹால்,காந்திபுரம்,உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கடைகள் மூடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் வலியிறுத்தினர்.மேலும் முழு அடைப்பு காரணமாக கோவையில் உள்ள உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு எந்த பேருந்துகளும் இயக்கப்படவில்லை.மேலும் கர்நாடகாவிற்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.