May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவை வழக்கறிஞர் சங்கத்தினர் இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவையில் இன்றும்,நாளையும் இரண்டு நாட்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது என கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் நாளை வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.சுமார்2 ஆயிரத்து 500 வழக்கறிஞர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால்,கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.