June 7, 2018
தண்டோரா குழு
துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு வரும் 9ஆம் தேதி தமிழக முதல்வர் பழனிசாமி செல்கிறார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் 100 வது நாள் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து கடந்த மே 28ம் தேதி துணை முதல்வர் பன்னீர் செல்வம் தூத்துக்குடி சென்று ஆறுதல் கூறினார்.இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடந்த தூத்துக்குடிக்கு வரும் 9 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.