May 31, 2018
தண்டோரா குழு
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.இதனையடுத்து,”போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த காரணம் முதலில் சமூக விரோதிகள் அவர்களை தாக்கி,கலெக்டர் அலுவலகத்தை தாக்கியது தான்” என ரஜினி பத்ரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசினார்.
இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்நிலையில் நடிகர் சித்தார்த் ரஜினியை ட்விட்டரில் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.அதில், “இவர்கள் அடுத்து என்ன சொல்வார்கள் தெரியுமா…இத்தனை வருடமாக தூத்துக்குடியை மாசு படுத்தியது ஸ்டெர்லைட் இல்லை சமூக விரோதிகள் தான்” என தெரிவித்துள்ளார்.