• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடியில் 108 கிலோ தங்க நகைகள் பறிமுதல்- தேர்தல் பறக்கும்படை அதிரடி

March 29, 2019 தண்டோரா குழு

தூத்துக்குடி நகரில் சோதனையின்போது வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 108 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

நாடு முழுவதும் மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதைபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறனர்.

இந்நிலையில், தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் நடந்த வாகன சோதனையின் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 108 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நகைக்கடைகளில் விநியோகிக்க கர்நாடகாவிலிருந்து தங்கம் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்கம் பலத்த பாதுகாப்புடன் ஆட்சியர் அலுவலகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும்,ஆவணங்கள் சரியாக இருந்தால் தங்கம் திருப்பி ஒப்படைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க