May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு திட்டமிட்டு நடத்தப்படவில்லை தற்காப்புக்காகவே நடத்தப்பட்டது என்று முதலமைச்சர் பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி,
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டு,தடியடி நடத்தியும் மக்கள் ஒத்துழைக்காததால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்களின் கோரிக்கை தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடியில் நடைபெற்ற சம்பவம் விரும்ப தகாத சம்பவம் என்றும், சில அரசியல் கட்சி தலைவர்கள் அப்பாவி மக்களை சுயநலத்திற்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு தொடர் முயற்சி எடுத்து வருகிறது.
ஸ்டெர்லைட்டுக்கு மின்சார இணைப்பை மின்சார வாரியம் இன்று துண்டித்துள்ளது.தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் சில சமூக விரோத சக்திகள் ஊடுருவியுள்ளன.மேலும்,எதிர்க்கட்சிகள் மற்றும் சில இயக்கங்கள் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டங்களை நடத்துகின்றனர்.