May 22, 2018
தண்டோரா குழு
துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது தான் தமிழகத்தின் இன்றையே கேள்வி உள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது.இதையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.இதையடுத்து,போலீசார் தடியடி நடத்தியதால்பொதுமக்கள் கல்வீசி அவர்களை தாக்கினர். போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
போராட்டகாரர்களை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 9 பேர் பலியானார்கள்.இந்நிலையில்,மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர்,
மக்கள் வாழும் பகுதியை ஸ்டெர்லைட் ஆலை மாசுபடுத்தி கொண்டுள்ளது.போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பது தான் தமிழகத்தின் இன்றையே கேள்வி. இந்த கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடந்திருக்காது. தூத்துக்குடியில் நடந்த சோகத்தை தமிழகத்தை மறக்காது.போராட்டக்காரர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு வரை போனது ஏன் என கமல் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதே இன்றைய நிலை. இறந்தவர்கள் குடும்பத்தை காக்க வேண்டும். மக்கள் அமைதி காக்க வேண்டும் என அரசு சொன்னால் போதாது. அரசும் அமைதியாக இருக்க வேண்டும் எனக் கூறினார்.