March 25, 2023
தண்டோரா குழு
துறையையும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி செயல்படுவது குறித்தான நிகழ்ச்சி காவல் ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காவல்துறையினர் எவ்வாறு தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் சமநிலைப்படுத்தி மகிழ்ச்சியுடன் செயல்படுவது என்பது குறித்தான நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.இதில் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் சேகர் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இந்நிகழ்வு குறித்து பகிர்ந்து கொண்டார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், காவல்துறையினர் தங்கள் துறையையும் மற்றும் குடும்பத்தையும் எவ்வாறு சமநிலைப்படுத்தி மகிழ்வாக செயல்படுவது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என காவலர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.