• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“துறைமுகத்தில் எண்ணெய்க் கசிவு அகற்றும் பணி 90 % நிறைவு”

February 4, 2017 தண்டோரா குழு

சென்னை அருகே கடலில் கலந்த கச்சா எண்ணெயை அகற்றும் பணி 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன எனவும், ஓரிரு நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“ஜனவரி 28-ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தில் 32,813 டன் அளவுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் சென்ற டான் காஞ்சிபுரம் கப்பல் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் டான் காஞ்சிபுரம் கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்து, கடலில் கலந்தது.

இதன் காரணமாக எண்ணெய்ப் படலம் உருவானது . அதனை அகற்றும் பணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலில் தொடர்ந்து எண்ணெய் கசிவு எற்படுவதை தடுக்க டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த POL (Petroleum, Oil and Lubricant) எண்ணெய் முழுவதுமாக வெள்ளிக்கிழமை வெளியே அகற்றப்பட்டுவிட்டது. கடலில் கொட்டிய எண்ணெயில், இதுவரை 157 டன் அளவுக்கு எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்து விட்டன. எண்ணெய் படலங்களை முழுமையாக அகற்றும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும்“
இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும் படிக்க