• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி மக்கள் என்னை பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் – ரஜினிகாந்த்

May 30, 2018 தண்டோரா குழு

துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி என்னை பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில்,பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்நிலையில்,துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவும் நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றார்.

முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்க இருக்கிறேன். என்னை பார்த்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.மேலும்,தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க