• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துப்பாக்கி சூடு விவாகரம் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 100-ஆவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பேரணியாக ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர். இதையடுத்து காவல் துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் டிஜிபி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் படிக்க