May 30, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி ரஜினிகாந்த் வழங்கினார்.
கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும் பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில்,பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில்,துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவும் நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றார்.இதையடுத்து,திறந்தவெளி வாகனத்தில் தூத்துக்குடி மக்களை சந்தித்தார்.பின்னர்,தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 48 பேரை சந்தித்து ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
மேலும்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரூபாயும் ரஜினி வாங்கினார்.ரஜினி வருகை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.