• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் – பொன். ராதா கிருஷ்ணன்.

March 7, 2017 தண்டோரா குழு'

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

இது தொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த ‌தமிழ‌க மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதிற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை பாஜக அரசு கொண்டு வரவில்லை . மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தை மத்திய அரசு எந்த வகையில் புறக்கணித்தது என கூற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க