• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துப்பாக்கிச்சுடும் போட்டியில் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறிய தல அஜித்!

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் நடைபெறும் துப்பாக்கிசுடும் போட்டியில் 10 மீட்டர் பிரிவில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித் குமார், போட்டியின் அடுத்தச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

தமிழ்நாடு சூட்டின் அசோசியேசன் சார்பாக துப்பாக்கி சுடுதல் போட்டி கோவை காலவர் பயிற்சி மையத்தில் உள்ள ரைபில் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 28 ஆம் தேதி துவங்கிய இப்போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற 10 எம். ஏர் பிஸ்டல் போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பாக திரைப்பட நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார். இப்போட்டியில் அஜித் முதல் சுற்றில் 71 புள்ளிகள், இரண்டாம் சுற்றில் 79 புள்ளிகள், மூன்றாம் சுற்றில் 83 புள்ளிகள், நான்காம் சுற்றில் 81 புள்ளிகள் எடுத்து அடுத்த சுற்று போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இதற்கிடையில், அஜித் போட்டியில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் எடுத்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக
வலைத்தளங்களில் வைராலாகி வருகிறது.

மேலும் படிக்க